பத்து ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாதா என்று பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.
பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்றும், தாராளமாக மக்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் சென்ற 08.02.2022 பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கொடுத்திருப்பதாக நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தி இணையதளத்தில் பரவலாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகளிலும், பால் பூத், மளிகைக் கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வியாபார ஸ்தலங்களிலும் பத்து ரூபாய் நாணயம் வாங்கப் படாமல் மறுக்கப்பட்டு வருவது உண்மையிலேயே வேதனைக்குரியது.
இப்பிரச்சினையால் மக்களுக்கும் வாங்காமல் மறுப்பவர்களுக்கும் அடிக்கடி சண்டையும், தகராறுகளும் அன்றாடம் ஏற்படுகின்றன.
மத்திய அரசு இப் பிரச்சினைக்கு தாமதமின்றி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் உதாசீனம் செய்யும் பேருந்துகள், வியாபார ஸ்தலங்கள், ஓட்டல்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து. கடுமையான நடவடிக்கை எடுக்க
மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
இல்லையேல் மத்திய அரசே பத்து ரூபாய் நாணயங்களை ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தாற் போல் ஒரேயடியாகத் தடை செய்து வங்கிகளில் அவைகளைக் கொடுத்து மாற்றாக வேறு புதிய வகையில் மாற்றிக் கொள்கிறாற் போல் ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்.
அன்றாடம் மக்கள் இந்த பத்து ரூபாய் நாணயத்தோடு படும் அவஸ்தைகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனே முடிவு கட்டுமா?
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998