உனை நினைத்தேன் அன்பே
உயிர்த்தாகம் கொண்டேன்.
நினைவெல்லாம் நீயே ஆனாய்!
நீங்காத கனவாய் நின்றாய்!
பலமுறை முயன்றேன் அன்பைச் சொல்ல
பாராமுகம் காட்டி நீ விலகிச் செல்ல
உன் நினைவில் வாடி அன்பே என்
உடலும் உயிரும் இப்போது
புல்லின் நுனியில் பனித்துளி!
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!