பனித்துளி

ஆதவன் வருவான் பாதகம் செய்வான்

பருகிச் செல்வான் அந்தக் கொடியவன்

இரவெல்லாம் தவமிருந்து புல்தன் மீது

இருத்தி வைத்த பனித்துளியை

 

மணிமுடி இழக்கும் புல் ஆனால்

மனம் தளர்வதில்லை மீண்டும்

மறுநாளே அதனை மீட்டெடுக்கும்

ஓய்வதில்லை போராட்டம் ஆனாலும் புல்

 

ஒரு நாளும் விட்டு விலகியதில்லை

அற்பப் புல்லென நினைத்தேன்

அற்புதப் புல்லென அறிந்தேன்

அதன் நுனியில் பனித்துளி கண்டு

– வ.முனீஸ்வரன்