பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 20 எண்ணம்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)
முந்திரி பருப்பு – 5 எண்ணம் (முழுமையானது)
மசாலா பொடி – 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்
தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 2 இணுக்கு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 1 எண்ணம்
பட்டை – பாதி சுண்டுவிரல் அளவு
அன்னாசிப்பூ – ½ எண்ணம்
பன்னீர் செய்முறை
பன்னீரை சிறுசதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி மிக்ஸியில் கூழாக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோலுரித்து மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பினை மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறுசதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வெந்ததும் இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒருசேரக் கிளறி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து அரைத்த தக்காளி விழதினைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கியதும் அரைத்த முந்திரி விழுதினைச் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒருநிமிடம் கழித்து சதுரங்களாக்கிய பன்னீரைச் சேர்த்து கிளறி அடுப்பினை சிம்மில் வைத்து மூடி போட்டு மூன்று நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பினை அணைத்து விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவவும்.
சுவையான பன்னீர் கிரேவி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
வெங்காயத்தை வெட்டும்போது மிகவும் பொடியாக வெட்டவும்.
மசாலா பொடி செய்வது எப்படி?
செய்து பார்த்தேன்; அருமையாக இருந்தது மேடம்.