பன்னீர் பக்கடா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பால் : 2 லிட்டர்

மைதா மாவு : பன்னீரின் அளவு

எலுமிச்சபழம் : 1

ரீபைண்ட் ஆயில் : சுடுவதற்கு தேவையான அளவு

உப்புத்தூள் : தேவையான அளவு

வெங்காயம் : 1

மிளகாய் : 5

மல்லி இலை  : சிறிதளவு

கருவேப்பிலை  : சிறிதளவு பொடியாக வெட்டியது

பன்னீரின் அளவு : 500 கிராம்

 

செய்முறை

பாலைக் காய்ச்சி அதில் எலுமிச்சம்பழம் பிழிந்து திரித்து ஒரு துணியில் கட்டி தண்ணீரை நன்றாக வடிய வைக்கவும்.

பின் பன்னீரை நன்றாக உதிர்த்து அதே அளவு மைதா மாவுட‌ன் நறுக்கிய‌ வெங்காயம், மிளகாய், பொடியாக வெட்டிய மல்லி இலை, கருவேப்பிலை, உப்புத்தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்

பின் காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக எடுக்கவும். சுவையான பன்னீர் பக்கடா தயார்.