பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்

தமிழ்த்தொகுப்புகள்

தமிழை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கவும், நுணுகிப் பார்க்கவும், தமிழில் கிடைக்கும் படைப்புகளின் தொகுப்பாக அமைந்திருக்கின்ற தளம் ”தமிழ்த் தொகுப்பு” எனும் தளமாகும்.

தமிழ்இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்பு முறை இதன் தனிச்சிறப்பு.

இம்முயற்சிக்குக் காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் என எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பாராட்டும் அளவுக்கு, இதிலிள்ள படைப்புகள் அனைத்தும் உலக இலக்கியங்களோடு போட்டி போடக் கூடியவையாகும்.

புதுச்சேரி, பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ இத்தளத்தின் மேன்மை குறித்துக் கூறும்பொழுது, தமிழ்த் தொகுப்புகள் வலைப்பதிவு ஒரு பயனுள்ள திரட்டியாக உள்ளது. எங்களைப் போன்ற பேராசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இத் தமிழ்த் தொகுப்புகள் ஒரு கொடை என்றே சொல்லலாம் என்பர்.

நவீன தமிழிலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்கள் மட்டுமின்றி இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளான சிறுகதைகள் பல்வேறு கட்டங்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவை அடங்கிய முக்கியமான இணையதளம்.முக்கிய சிறுகதைகள் அனைத்தையும் இதில் படிக்கலாம்.

தொகுப்புகள் – பல தரப்பட்ட முக்கிய படைப்புகளை நமக்கு தருகின்றது.

“நவீன இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி பல்வேறு மரபிலக்கியங்களையும் இதில் வலையேற்றியுள்ளார்கள். அனைவரும் தவறாமல் தொடரவேண்டிய இணையதளம் இது” என்பது கிருஷ்ணகுமார் ஆதவன் அவர்களின் கருத்தாகும்.

தமிழகத்தின் மிகச்சிறந்த அன்றைய, இன்றைய எழுத்தாளர்கள் பலரைச் சமூகத்தின் தளத்தில் பதிந்து, இலக்கியவான்களை வரலாற்றில் இடம்பெறச் செய்வதும் ஒரு மிகப்பெரிய இலக்கியப் பணியாகவே இருக்கின்றது.

அதன் அடிப்படையில் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அதிகமானவர்களைக் காணலாம். அவர்களைக் குறித்து எத்தனை கட்டுரைகள் உள்ளன எனப் பதிவிட்டிருப்பதும் படிப்பவர்களுக்குச் சிறப்பான வழிமுறையாகும்.

எழுத்தாளர்கள் பட்டியல் ஒரு புறமும், இலக்கிய வகைகள் ஒரு புறமும் பட்டியலிடப்பட்டுள்ளன. தேடல் பொறியும் உள்ளது.

தமிழ்மொழியின் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளும், சிறுகதைப்படைப்புகளும் ஒன்று சேர நாம் இங்கு படிக்கலாம். எனவே ஆய்வாளர்களுக்கு இத்தளம் ஒரு சொர்க்கபூமியாக உள்ளது.

எஸ். இராமகிருஷ்ணன் எழுதிய 25 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனின் படைப்புகள் 105 காணப்படுகின்றன.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – எனும் தலைப்பில் கவிக்கோ ஞானச்செல்வனின் 73 கட்டுரைகள் உள்ளன. இதைப்போல் பல நூறு எழுத்தாளர்களின் படைப்புகள் இங்குள்ளன.

நேர்காணல் பகுதியில் 56 நேர்காணல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலக்கிய ஜாம்பவான்களின் நேர்காணலாக அவைகள் உள்ளன.

நவீனம் எனும் தலைப்பில் இக்கால இலக்கிய நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும் கட்டுரைகள் உள்ளன.அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை – எச்.முஜீப் ரஹ்மான்

பின் நவீனத்துவச் சிறுகதைகள் – எம்.ஜி.சுரேஷ்

பின் நவீனத்துவ கவிதை – முனைவர் க. நாகநந்தினி

தமிழ் நவீன நாடகங்களில் – நடப்பியல் – பா. குமார்

தமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும் – க. பூரணச்சந்திரன்

அனைத்துப் படைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பதால், அனைத்தும் தரமானதாகக் காணக்கிடைக்கின்றன.

தளத்திலுள்ள தலைப்புகள்:

அகத்திணை (5)
அகநானூறு (11)
அந்தாதி (1)
அருணகிரி (1)
அறிஞர்கள் (3)
அறிவியல் (3)
அஷ்டபிரபந்தம் (3)
ஆசாரக் கோவை (1)
ஆய்வுக்கோவை (190)
ஆற்றுப்படை (1)
இசை (8)
இலக்கணம் (20)
இலக்கியப் பார்வை (34)
இளங்கோவடிகள் (1)
இன்னா நாற்பது (1)
இனியவை நாற்பது (1)
உருவகக்கதை (1)
உலா (1)
எண் செய்யுள் (1)
ஏலாதி (1)
ஐங்குறுநூறு (2)
ஐந்திணை அறுபது (1)
ஐந்திணை எழுபது (1)
ஐந்திணை ஐம்பது (1)
ஒட்டக்கூத்தர் (1)
ஒருபா ஒரு பஃது (1)
ஔவையார் (1)
கட்டுரை மாலை (71)
கபிலர் (6)
கம்ப ராமாயணம் (17)
கம்பர் (9)
கல்வெட்டு (1)
கலம்​ப​கம் (2)
கலிங்கத்துப் பரணி (1)
கலித்தொகை (11)
கவிதை (18)
களவழி நாற்பது (2)
கார் நாற்பது (1)
காளமேகம் (1)
கிரந்தம் (1)
கீர்த்தனை (1)
குறவஞ்சி (2)
குறுந்தொகை (14)
கைக்கிளை (1)
கையறுநிலை (1)
சங்க கால நாணயம் (1)
சங்க காலம் (60)
சங்கச் சுரங்கம் (1)
சடங்கு (5)
சதகம் (1)
சமயம் (6)
சமூக விஞ்ஞானம் (3)
சாதியம் (1)
சிலப்பதிகாரம் (17)
சிவப்பிரகாசர் (1)
சிற்றிலக்கியம் (21)
சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
சிறுகதை (710)
சிறுபஞ்ச மூலம் (3)
சீவகசிந்தாமணி (2)
சுவடி (1)
செம்மொழி (18)
செவியறிவுறூஉ (1)
சொல் வேட்டை (35)
சோழர்கள் (4)
தக்கயாகப்பரணி (2)
தந்தைப் பெரியார் (1)
தமிழ்ச் சுடர்மணிகள் (46)
தமிழ்ப் புத்திலக்கியம் (16)
தமிழர் பண்பாடு (10)
தற்காலத் தமிழ் (12)
தாண்டகம் (1)
தாலாட்டு (1)
திணைமாலை நூற்றைம்பது (1)
திணைமொழி ஐம்பது (1)
திரிகடுகம் (3)
திருஅருட்பா (1)
திருக்குறள் (60)
திருப்புகழ் (2)
திருவரங்கக் கலம்பகம் (1)
திருவள்ளுவர் (14)
திருவாசகம் (1)
திருவாய்மொழி (2)
திருவிழா (2)
திறனாய்வு (7)
தூது (1)
தேவாரம் (2)
தொல்காப்பியம் (74)
நந்திக்கலம்​ப​கம் (2)
நவீனம் (5)
நற்றினை (9)
நன்னூல் (2)
நாட்டுப்புறவியல் (128)
நாடகம் (3)
நாலடியார் (4)
நாவல் (7)
நான்மணிக் கடிகை (2)
நிகண்டு (2)
நெடுங்கதை (1)
நெடுநல்வாடை (1)
நேர்காணல் (56)
நொண்டி நாடகம் (1)
பட்டினப்பாலை (1)
பத்துப்பாட்டு (1)
பதிகம் (1)
பதிப்புத் துறை (7)
பதிற்றுப்பத்து (2)
பதினெண் கீழ்க்கணக்கு (20)
பரணி (1)
பரிபாடல் (3)
பழமொழி (1)
பழமொழிகள் (13)
பள்ளு (1)
பாண்டியர்கள் (1)
பாலை (2)
பிள்ளைத்தமிழ் (1)
பிறதுறைத் தமிழியல் (12)
புதுவிசை (1)
புறத்திணை (1)
புறநானூறு (18)
பெருங்கதை (1)
பொருநராற்றுப்படை (2)
மகாபாரதம் (2)
மணிமேகலை (2)
மதுரைக் காஞ்சி (2)
மாலை (1)
முத்தொள்ளாயிரம் (2)
முதுமொழிக்காஞ்சி (1)
முல்லைத் திணை (1)
முன்னைத் தமிழிலக்கியம் (21)
மூவருலா (1)
மொழி (2)
மொழிப் பயிற்சி (74)
மொழிபெயர்ப்பு (16)
ராஜராஜ சோழன் (9)
ராஜேந்திர சோழன் (2)
வரலாறு (16)
வள்ளலார் (5)
விடுகதைகள் (2)
வில்லிபாரதம் (1)
விவேக சிந்தாமணி (1)
விளையாட்டு (1)
வீரமாமுனிவர் (1)
வேர்களைத் தேடி (124)
வேருக்கு நீர் வார்த்தவர்கள் (40)

தமிழ் இலக்கியத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமா? https://thoguppukal.blogspot.com எனும் சொடுக்கியைச் சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

Visited 1 times, 1 visit(s) today

Comments

“பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்” மீது ஒரு மறுமொழி

  1. முனைவர் எ. பாவலன்

    ஒவ்வொரு இணையத்தையும் நீங்கள் அறிமுகப்படுத்தும் பொழுது ஒவ்வொரு புதிய சிந்தனை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    நாமும் இதுபோன்று பணியை செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. ஆனால் அதற்கான உழைப்பு உங்களைப் போல எம்மால் செலவிட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    தியாகம் மட்டும் தான் நிச்சயம் வெற்றி அடைய முடியும்.

    நீங்கள் செய்யும் இந்த அளப்பரிய தியாகம்…

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் இந்த அளப்பரிய தியாகம் நிச்சயம் வரலாற்றில் பதிவு செய்யப்பபடும். இந்த எண்ணத்தை ஆங்கிலத்தில் சொல்லும்பொழுது இப்படியாகச் சொல்வார்கள்.

    Earning to learning.

    I am really proud of you my dear professor!

    Thank you once again.