பயணித்துக் கொண்டிருந்தன
செம்மறியாடுகள்
கட்டுப்பட்டுவிட்டதற்கான
பின் தொடர்வில்
மந்தையாக!
அடிவாங்கியது
வழிமாற
முயன்ற ஆடு
பிற ஆடுகள்
கத்துமாறு!
சொரணையற்ற
கிடா
அடி வாங்கியே
முயன்றது
வீரியத்தோடு!
மேய்ப்பனின்
துரித விரட்டல்
அவசரம்
புரிந்தது
இருளிற்கு முன்பு
இருப்பிடம்
சேர்த்துவிட வேண்டிய
அக்கறை!
சிதறிய செம்மறி ஆடுகள்
சிலது
செத்துப்போயின
பேருந்தில்
மோதி
விபரீத விபத்தென!
பெரிதாக
காரணம் தெரியவில்லை.
பேருந்தில்
விழுந்ததற்கு
பிரம்பொன்று வழியில்
கிடந்ததைத் தவிர…
ரவி அல்லது
ravialladhu@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!