கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் மூவர் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.
குரு அரவிந்தன்
எஸ்.பத்மநாதன்
ஆர்.என்.லோகேந்திரலிங்கம்
ஆகிய மூவரும், இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் இதழ் நடத்திய, மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.
ஞானம் இதழின் பொறுப்பாசிரியர் திரு.ஞானசேகரன் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த மாபெரும் இலக்கியப் போட்டி உலக அளவில் நடைபெற்றது.
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை மற்றும் சிற்றிதழ் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. உலகம் முழுவதிலுமிருந்து பல எழுத்தாளர்கள் போட்டியில் பங்கு பெற்றனர்.
கீழ்கண்ட பிரிவுகளில் கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் பரிசு வென்றுள்ளனர்.
கட்டுரை
சிந்தனைப் பூக்கள் – எஸ்.பத்மநாதன்
எதுவரை – ஆர்.என். லோகேந்திரலிங்கம்
நாவல்
அம்மாவின் பிள்ளைகள் – குரு அரவிந்தன்
போர்க்கால சூழலை, மக்கள் பட்ட அவலத்தைக் கண் முன்னே கொண்டு வந்த நாவல். தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் மற்றும் யுகமாயினி இதழ்களின் போட்டியில் பரிசு பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு.
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் ஆவார். அவர் போட்டியில் பரிசு பெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினர்களான எஸ்.பத்மநாதன் மற்றும் ஆர்.என். லோகேந்திரலிங்கம் இருவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த இலக்கியப் போட்டிகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை இலங்கை ரூபா 3,25,000 என்றும், பரிசளிப்பு விழா 12-03-2022 சனிக்கிழமையன்று கொழும்புத் தமிழ் சங்கத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!