பரிதி மதி

பரிதி (சூரியன்)

உரிய சமயம் உதிப்பான் சிறக்க

அரிய செயல்கள் அனைத்தும் – பரிதி

விரிந்து பயனை வழங்கும் இருளை

எரிக்கும் இரவியை ஏத்து!

மதி (நிலா)

ஒளியை நிரப்பி ஒளிந்து கிடந்த

ஒளிர்வை புவியும் உணர – மிளிர்ந்து

குளிர்ந்து மனதைக் கவரும் மதியே

களிப்பைத் தருவான் கனிந்து!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com