எப்பொழுதுமே
வெகு தொலைவிலிருக்கிறது
இந்த உலகம்
அண்ட சராசரங்களில்
எந்த புள்ளியிலும்
நான் இல்லை
நொடிக்கு நொடி
நான் பிறப்பதினால்
சீன பெட்டிகளின் பெட்டியில்
நான் இருக்கிறேன்
கிடைத்த எதையாவது
ஒன்றை நான் சொல்ல
இந்த இயற்கையைப் போல்
கவனிப்பாரற்று கிடக்கிறேன்
சொல்வதற்கு
நான் இல்லாத போதும்
இவ்வுலகம் இருக்கிறது
ஒரு இடத்திற்கு
நான் போய்ச் சேர்ந்ததும்
அவ்விடத்தை பற்றி
ஸ்தூலமாகக் கனவு காண்கின்றேன்
அனைத்து விதமான புரிதல்களும்
பறவைகள் போல்
என்னைச் சுற்றிப் பறக்கின்றது
என் மீது மோதும்
அதிலொரு பறவையினால்
என் விழிப்பு தட்டுகிறது
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!