பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 21 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 08.04.2019 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.
கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
2019-ஆம் வெளியிடப்பட்ட பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுரு 82.28 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி 68.68 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
பனாராஸ் இந்து பல்கலைக்கழகம், கொல்கத்தா தரவரிசையில் 64.55 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 60.35 மதிப்பெண்களைப் பெற்று ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.
பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019
வரிசை எண் | பெயர் | மதிப்பெண் | இடம் |
1 | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | 60.35 | 7 |
2 | அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் | 59.22 | 8 |
3 | பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் | 57.23 | 14 |
4 | வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் | 51.44 | 19 |
5 | சென்னை பல்கலைக்கழகம், சென்னை | 51.34 | 20 |
6 | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி | 48.54 | 28 |
7 | எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 47.80 | 32 |
8 | ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 47.34 | 33 |
9 | பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 46.32 | 36 |
10 | சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் | 45.80 | 40 |
11 | சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 45.58 | 41 |
12 | சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 45.42 | 43 |
13 | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் | 45.41 | 44 |
14 | மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை | 45.20 | 45 |
15 | பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி | 43.41 | 60 |
16 | பெரியார் பல்கலைக்கழகம், சேலம் | 40.99 | 68 |
17 | தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை | 40.88 | 70 |
18 | காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமம் | 40.42 | 75 |
19 | காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், கோயம்புத்தூர் | 38.79 | 92 |
20 | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி | 38.76 | 93 |
21 | மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்விற்கான அகடாமி, சென்னை | 38.45 | 100 |
இந்திய அளவில் தமிழக பல்கலைக்கழகங்கள் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.