பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-ஆம் வெளியிடப்பட்ட பல் மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், மவுலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி
82.51 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

மணிப்பால் பல் அறிவியல் கல்லூரி, உடுப்பி, 78.17 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

டாக்டர் டி. ஒய். பாட்டீல் வித்யாபீத், புனே, 76.37 பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

வ. எண் பெயர் மதிப்பெண் இடம்
1 சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை 72.34 4
2 ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 66.27 7
3 எஸ்.ஆர்.எம் பல் மருத்துவ கல்லூரி, சென்னை 64.47 9
4 எம். ஜி. ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 54.02 27

 

பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 30 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 பல் மருத்துவ கல்லூரிகள்  இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் தமிழக பல் மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும்  முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.