பள்ளி செல்லுவோம்
பள்ளி செல்லுவோம்
படிப்போடு பண்பாடும் தரும்
பள்ளி செல்லுவோம்
துள்ளி செல்லுவோம்
துள்ளி செல்லுவோம்
துடிப்போடு துவளாமல் தினந்தினம்
துள்ளி செல்லுவோம்
தள்ளி செல்லுவோம்
தள்ளி செல்லுவோம்
அல்லல் தரும் அலைபேசியை
தள்ளி செல்லுவோம்
அள்ளி செல்லுவோம்
அள்ளி செல்லுவோம்
அன்பையும் அறிவையும் ஆற்றலையும்
அள்ளிச் செல்லுவோம்
சொல்லிச் செல்லுவோம்
சொல்லிச் செல்லுவோம்
பள்ளி தரும் பயன்களை
சொல்லிச் சொல்லிச் செல்லுவோம்
மறுமொழி இடவும்