தலையை வாரப் பழகுவோமே
சடைகள் போடப் பழகுவோமே
பூ முடிக்கப் பழகுவோமே
பொட்டு வைக்கப் பழகுவோமே
கோலம் போடப் பழகுவோமே
கூட்டிப் பெருக்க பழகுவோமே
பூக்கள் போடப் பழகுவோமே
புதுத்துணி தைக்கப் பழகுவோமே
அன்பாய் பேசப் பழகுவோமே
ஆடல் பாடல் பழகுவோமே
பள்ளி சென்று படிப்போமே
பலரும் புகழ நடப்போமே