அது ஒரு குருகுலம்.
அங்கே தினசரி கூட்டு வழிபாடு உண்டு.
அங்கு வளர்ந்த பூனை ஒன்று கூட்டு வழிபாட்டுக்கு இடையிடையே அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருக்கும். எனவே வழிபாடு துவங்கும் முன்பு அங்கிருந்த ஒரு தூணில் அதை கட்டிப் போட்டுவிட்டுப் பின் வழிபாடு துவங்குவது வாடிக்கையாகி விட்டது.
குருகுலக்கல்வியில் சிலர் புதிதாக சேர்வது, சிலர் கல்வி பயின்று வெளியேறுவது என ஆண்டுகள் பல கடந்தும் பூனையைக் கட்டிப் போடுவது தொடர்ந்தே வந்தது.
ஒரு நாள் குரு இறந்து விட, குரு இறந்த சில நாட்களில் வளர்ப்புப் பூனையும் இறந்தது.
குருவின் சீடர்களில் ஒருவர் குருவாக பொறுப்பேற்க புதிய குருவின் தலைமையில் சில மாத இடைவெளியில் அன்று கூட்டு வழிபாடு.
முதலில் பூனையைத் தூணில் கட்டணும். அதற்குப் பிறகே வழிபாடு. பூனை இல்லாமல் வழிபாடு பூர்த்தியாகாது என சீடர்கள் தேடி அலைந்து புதிய பூனையைத் தூணில் கட்டினார்களாம்.
இது போன்றே பல்வேறு நடவடிக்கைகளை ஏன் என்று தெரியாமலேயே பலரும் தொடர்கிறனர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறைகளுக்கில்லை என நாமும் கூட தொடரத்தான் வேண்டியதிருக்கின்றது
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!