பழைய வீடு

கட்டில் கயிறுகளையும் இறுக்கிக்
கோர்த்துப் பின்னத்
தொடங்கிவிட்ட சிலந்திகள்

சுண்ணாம்புப் பூச்சுகளுரித்துச் சுவர்களின்
மோனத்தைக் கலைக்கிற
வெற்றிலை உழக்கின் அதிர்வுகள்

மச்சில் காய போட்ட சேலை
தூவானமாய் இன்னும் நீர்த்துளிகளைச்
சொட்டுகிறது தட்டோடுகளில்

இரண்டு பக்கமிருந்தும் தட்டப்படுகிறது
தாழ்ப்பாள் இல்லாத கதவு அவ்வப்போது
வந்து போகிற காற்றால் மட்டும்…

ச.குருபிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com