பாசம்!

அலுவலக வேலை நிமித்தம், சென்னை சென்றுவிட்டு அன்று காலைதான் திருச்சி திரும்பினேன். வீட்டுக்கள் நுழையும்போதே சாருக்குட்டி என் கால்களைக் கட்டிக் கொண்டு “அங்கிள்! நாணுத்தாத்தா சாமி கிட்டப் போயிட்டார் தெரியுமா?’” என கீச்சுக் குரலில் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. இல்லை ஜீரணிக்க முடியவில்லை. அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நான் வந்துவிட்டதை அறிந்த என் தங்கை, “குட்டி சொல்றது உண்மைதான் அண்ணா. அவர் போய்ச் சேர்ந்து இன்றோடு மூணு நாளாகிறது” என்றாள். என் மனம் … பாசம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.