பாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி?

பாசி பருப்பு சாம்பார் இட்லி, தோசை, வெண்பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை எளிதாக செய்யலாம்.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

பெரும்பாலும் ஹோட்டல்களில் பாசிப்பருப்பினை பயன்படுத்தி சாம்பார் செய்வதில்லை.

சுவையுடன் ஆரோக்கியமான இதனை சமையல் செய்ய கற்றுக் கொள்பவர்களும் செய்து அசத்தலாம்.

இனி எளிய முறையில் சுவையாக பாசி பருப்பு சாம்பார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – 100 கிராம்

தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

மல்லி இலை – 2 கொத்து

மசாலா பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடுகு ‍ 1/2 டீஸ்பூன்

வெந்தயம் ‍ 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1 எண்ணம்

கறிவேப்பிலை – 2 கீற்று

மிளகாய் வற்றல் – 1 எண்ணம்

செய்முறை

பாசி பருப்பினை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய தக்காளி மற்றும் வெங்காயம்

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.

மல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மசாலா பொடியை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

மசாலாப் பொடியைக் கரைத்ததும்

குக்கரில் பாசி பருப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

பாசி பருப்பு வேகும்போது

பாசிப் பருப்பினை அடுப்பில் வைத்த பின்பு காய்களை வெட்டிக் கொள்ளலாம்.

பாசிப் பருப்பு எளிதில் வெந்து விடும். துவரம்பருப்பினைப்போல் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆதலால் அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.

ஒருநிமிடம் கழித்து அதனுடன் கரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

கரைத்த மசாலாப் பொடியைச் சேர்க்கும்போது

அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் கிளறி பின்னர் தேவையான தண்ணீர் (3 டம்ளர்) மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.

குக்கரை மூடும் முன்பு

குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் மூன்று நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒருசேரக் கிளறி விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

தாளிதம் செய்யும்போது

சுவையான பாசி பருப்பு சாம்பார் தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முருங்கைக்காய் சேர்த்து சாம்பார் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதிலாக கொத்த மல்லிப்பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து சாம்பார் தயார் செய்யலாம்

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.