பாடகன் தண்ணீரைப் போல
இசையோடு கரைந்து விடுகிறான்
அதனால்தான் சில பாடல்கள்
கண்ணீரை வரவைக்கின்றன
உணர்வு ததும்ப
உள்ளம் நிரம்ப
இதயம் இசையாய்த் துடிக்கிறது
கவிஞனின் காதல் வரிகளோடு
இசைக் கலைஞனின்
இதய உறவோடு கேட்போரின்
காற்றில் பஞ்சாய்ப் பறக்கிறது
உயிர்த் துடிப்போடு
உதடும் உள்ளமும் உச்சரித்துப் பார்க்கிறது
பாடல் வரிகளைத்
தனிமையில் தாலாட்டாய்!
ப.கலைச்செல்வன்
ஜமால் முகமது கல்லூரி
முதுகலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு
திருச்சிராப்பள்ளி
மின்னஞ்சல்: writerkalaiselvan@gmail.com
கைபேசி: 9385517371