பாட்டியின் புலம்பல்!

பாட்டியின் புலம்பல்

கூடலூரில் முதுமையால் தளர்ந்த ஒரு மூதாட்டி இருந்தாள். வயதாகியபோதும் நாள் முழுவதும் பரபரப்புடன் ஏதாவது செய்து கொண்டிருப்பாள் அவள்.

களைப்படையும் போது ஒவ்வொரு முறையும் அவள் “எமதர்மராஜா! எப்போதடா என்னை அழைத்துக் கொண்டு போகப் போகிறாய்? எத்தனை காலம் இந்த உலகத்தில் கிடந்து நான் துன்பப்படுவேன்?” என்று சலித்துக் கொள்வாள்.

ஒருநாள் மாலை நேரம், மூதாட்டி பக்கத்திலிருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று விறகுச் சுள்ளிகளைச் சேகரித்துக் கட்டாகக் கட்டினாள்.

பிறகு விறகுக் கட்டடைத் தூக்குவதற்கு மூதாட்டி முயற்சி செய்தாள். அவளால் முடியவில்லை. மூச்சு வாங்கியது. இடுப்பைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

அதன்பின்னர் மூதாட்டி வழக்கம் போல சலிப்புடன் “எமதர்மராஜா! எனக்கு எவ்வளவு கஷ்டம் பார்த்தாயா? இன்னும் எத்தனை காலந்தான் இந்த உலகத்தில் என்னைவிட்டு வைக்கப் போகிறாய்? சீக்கிரம் வந்து என்னை அழைத்துக் கொள்ள மாட்டாயா? ச்சே! என்ன வாழ்க்கை?” என்று புலம்பினாள்.

மூதாட்டியின் புலம்பல் வானத்தில் சென்று கொண்டிருந்த எமதர்மராஜனின் காதில் விழுந்தது.

கிழவி அழைத்த குரலுக்கு உடனே அவன் கீழே இறங்கி வந்து “என்ன பாட்டி! நான் தான் எமதர்மன். என்னைப் பெயரிட்டு அழைத்தாயே எதற்காக? உன் விருப்பம் என்ன?” என்று கேட்டான்.

எமதர்மனே நேரில் வந்து விட்டதை அறிந்ததும், மூதாட்டி ஆடிப்போய் விட்டாள். அவள் உடல் நடுங்கியது.

மூதாட்டி சலிப்பினால் தான் அடிக்கடி எமதர்மனை அழைப்பாளே தவிர, உண்மையில் உயிரை விடும் எண்ணம் அவளுக்கு சற்றும் இல்லை.

யாரும் மனப்பூர்வமாகச் சாக விரும்புவதில்லை. பாட்டியும் இதற்கு விதி விலக்கல்ல. அதனால் அமைதியாக நின்றாள்.

“என்ன பாட்டி நீ என்னை அழைத்தாய். இப்போது ஒன்றும் பதில் சொல்லாமல் இருக்கிறாயே?” என்று எமன் திரும்பவும் கேட்டான்.

எமதர்மன் அவள் விரும்பியவாறே விறகு கட்டைக் கிழவியின் தலையில் தூக்கி வைத்துவிட்டுப் புறப்பட்டான்.

மூதாட்டி நிம்மதி பெருமூச்சு விட்டாள். அதன் பின் அம்மூதாட்டி எமதர்மனை அழைப்பதில்லை.