ஏதுமற்ற என்னறையின்
நிசப்த பெரும் இரவில்
உன் சுவாசத்தின்
சுவட்டு ரேகைகள்,
நிரம்பி வழியும்
உன்னுடனான என் நினைவுகளுக்கு
கச்சாப் பொருளாகி,
கனத்த என் மவுனத்தின் மீது
கல் ஒன்றை எறிந்து
கைக்கொட்டிச் சிரிக்கிறது!
எப்படிச் சொல்வேன்
கண்ணெதிரே தோன்றும்
உன்னுருவத்தின் சாயலுக்கும்
நானிட்ட பாதமுத்தங்கள்
பலகோடி என்று?
கவிஞர் விசித்திரக்கவி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!