பாப்பா செல்ல பாப்பா
இப்ப இங்கே வா பாப்பா
பாட்டி சொல்லை கேளு
தட்டிடாமல் வாழு!
தத்தி தத்தி வந்து
செல்ல முத்தம் கொடு!
அத்தனையும் உந்தன்
அன்பு மொழியாலே!
சத்தியம் தான் சொல்வேன் பல சாத்திரங்களாலே
சத்தியத்தை பேசி உண்மை கூறுவேனே!
எந்த வேளையிலும் பொய்கள் சொல்லிடாதே!
வந்த சோதனைகள் ஓடிப் போகும் கண்ணே!
நல்ல பிள்ளையாக நீயும் ஆக வேண்டும்
கள்ளமில்லா உள்ளம் நீயும் கொள்ள வேண்டும்
அள்ளித் தந்து நீயே சேவை செய்ய வேண்டும்
அன்னை தந்தை தெய்வம் பலர் வாழ்த்த
நல்ல மாந்தராக வேண்டும்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com