பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ருமி ஒரு சிறந்த அறிஞர். மனித வாழ்வு பற்றிய அவரின் சிந்தனை முத்துக்கள் பற்றிக் கொஞ்சம் நாம் சிந்திப்போம்.
நஞ்சு என்பது என்ன?
தேவைக்கு அதிகமாக இருக்கும் எதுவும் நஞ்சு தான். அதிகாரம், பணம், புகழ், ஆசை, பசி, அன்பு, வெறுப்பு என எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான்.
பயம் என்பது என்ன?
நிச்சயமில்லாத தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது பயம்.
நிச்சயமில்லாத தன்மையை ஏற்றுக் கொள்வது வீரம்.
பொறாமை என்பது என்ன?
மற்றவர்களின் நல்ல குணங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமை ஆகும்.
மற்றவர்களின் நல்ல குணங்களை ஏற்றுக் கொண்டால் அது நமக்கு உத்வேகம் தரும்.
கோபம் என்பது என்ன?
நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை ஏற்க மறுப்பதே கோபம்.
நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை ஏற்றுக் கொள்வதே பொறுமை ஆகும்.
வெறுப்பு என்பது என்ன?
ஒரு மனித்னை ஏற்றுக் கொள்ள மறுப்பதே வெறுப்பு ஆகும்.
நிபந்தனை இல்லாமல் ஒருவரை ஏற்றுக் கொள்வதே அன்பு ஆகும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!