எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்‘ எனும் நூல், பொதிகை மின்னல் கலைக்கூடம் வழங்கும் சிறந்த கட்டுரை நூல் விருது பெற்றது.

விருது பெற்ற எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

பாரதிசந்திரன்என்ற பெயரில் இலக்கியத்தில் இயங்கி வரும் முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் அவர்கள் சென்னை ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பல தமிழ் இதழ்களில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ் வளர்ச்சிக்காகத் தன் நேரத்தை அர்ப்பணிக்கும் பாரதிசந்திரன் அவர்கள் இன்னும் நிறைய விருதுகள் பெறுவார்.

பாரதிசந்திரனின் படைப்புகள்

சென்னை எழும்பூர் இச்சா மையத்தில், பொதிகை மின்னல் கலைக்கூடம் அமைப்பினர், ‘பொதிகை மின்னலின் 22-ஆண்டு விழா’வை மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக, முதுபெரும் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நக்கீரன் இதழின் இனிய உதயம் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், கவிஞர் கார்முகிலன், மாதா கேன்சர் கேர் புற்றுநோய் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் விஜயஸ்ரீ மற்றும் புதுவை தமிழ்நெஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதிகை மின்னலின் இதழாசிரியர் வசீகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

சிறந்த சிற்றிதழுக்கான விருது புதுக்கோட்டை ஏழைதாசன் இதழுக்கு வழங்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பயண நூல் உள்ளிட்ட ஏழுவகைகளில் சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் கட்டுரைப் போட்டிக்கான சிறந்த நூலுக்கான பரிசினை ஆவடி வேல் டெக் கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக்கோட்பாடும்’ எனும் நூலுக்குச் சிறந்த பரிசும் விருதும் வழங்கப்பட்டன.

இந்தக் கட்டுரை நூலை தேர்ந்தெடுத்த நடுவர், வழக்கறிஞர் பால சீனிவாசன் பேசும்போது,

“கட்டுரை போட்டிக்கு 93 நூல்கள் வந்தன. அவற்றில் இந்த நூல் தற்காலத் தமிழின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. மற்றும் சங்க இலக்கியம் தொட்டு இக்கால இலக்கியம் வரைப் பரந்துபட்ட பார்வையும் இதில் இருக்கின்றது. கூர்மையான திறனாய்வுகள் இதில் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று கூறினார்.

விழா ஏற்பாடுகளைப் பொதிகை மின்னல் இதழின் ஆசிரியர் வசீகரன் ஏற்பாடு செய்திருந்தார்.

விருது பெற்ற முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் அவர்களுக்கு ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியும் சிறந்த நூல் விருது பெற்றமைக்காகப் பாராட்டு விழா நடத்தினர்.

அதில், கல்லூரி முதல்வர், திட்ட மேலாண்மை அதிகாரி, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பாரதிசந்திரன் அவர்களுக்குக் கல்லூரியில் பாராட்டு விழா

2 Replies to “எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: