பாரதியின் சாரதி கண்ணதாசன்

கவிதை வானில் சூரியன் தமிழ்ப்பாரதி – அவன்

காட்டிய வழியில் வந்தவன் கண்ணதாசனடி

சிவிகை ஏறியே வலம் வந்தவன் பாரதி – அந்த

சின்னத் திரையின் நாயகன் கண்ணதாசனடி

 

ஆத்திரம் கொண்டே பாடம் சொன்னவன் பாரதி – அவர்

ஆக்கிய கவிதை அக்னிக் குஞ்சேதானடி

சூத்திர மாகவே சித்தர் தம்வாழ்வினை – எளிதாய்

சுருக்கித் தேனாய் தந்தவன் கண்ணதாசனடி

 

விந்தை மனிதர் வாழ்வினை சாடினான் பாரதி – அவர்

வேடிக்கை வாழ்வை வெறுத்து பாடினான் பாரதி

எந்திர மாகவே வாழ்ந்திடும் மாந்தர்தம் – மனம்

இளமையில் லயிக்கச் செய்தவன் கண்ணதாசனடி

 

மந்திரத் தமிழை மருந்தாய் தந்தவன் பாரதி – அவன்

மாற்றி விட்டான் மக்களை வீரமாய்தானடி

சுந்தரத் தமிழை தேனில் தோய்த்து தினம்

சுகமாய் பாடிட சொன்னவன் கண்ணதாசனடி

– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.