என்னாடு என்று எல்லோரும்
சொல்ல முடியாக் காலத்தில்
அடிமைகளாய்க் கொடுமைகளை
அனுபவித்த காலத்தில்எதிர்த்துக் கேட்டால் கட்டாயம்
உதிரம் சிந்த வேண்டும் கூடவே
உயிரும் போகலாமென்ற காலத்தில்
தனக்கென்று எதுவும் இல்லாத
ஒருவன் சொன்னான்
‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு’
எழுத்துரிமை பேச்சுரிமை உள்ள காலத்தில்
எல்லோர்க்கும் சமநீதி என்ற காலத்தில்
கல்வி தொழில் கூடிய காலத்தில்
நம்மை நாமே ஆள்கின்ற இக்காலத்தில்
நம்மில் பலர் மனம் சொல்லுமா?
‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’
– வ.முனீஸ்வரன்
Visited 1 times, 1 visit(s) today