திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

மனமே கவரும்
மதியை மயக்கும்
மறைப்பொருளே!

கனமே மறையும்
கருணைப் பொழியும்
கணைகழலே!

தனமே குவியும்
தழைக்கும் நிதியும்
தருமிடமே!

சனமே வணங்க
சகலமும் நல்கிடும்
சாரதியே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com