பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 75 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 9 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.
கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
2020-ஆம் வெளியிடப்பட்ட பார்மசி கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், ஜாமியா ஹாம்டார்ட், டெல்லி 80.50 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் 79.80 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மொஹாலி, மொஹாலி 74.73 பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
பார்மசி கல்லூரிகளின் தரவரிசை
வரிசை எண் | பெயர் | மதிப்பெண் | இடம் |
1 | ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி, ஊட்டி | 65.60 | 9 |
2 | அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் | 59.88 | 12 |
3 | எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 54.85 | 19 |
4 | ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 51.52 | 26 |
5 | வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அன்ட் ஸ்டடிஸ், சென்னை | 44.35 | 43 |
6 | பி.எஸ்.ஜி. பார்மசி கல்லூரி, கோயம்புத்தூர் | 42.21 | 51 |
7 | பார்மசி கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை | 40.93 | 57 |
8 | ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் சயின்சஸ் நிறுவனம், கோயம்புத்தூர் | 38.17 | 66 |
9 | கே.எம்.சி.எச். மருந்தியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 37.70 | 70 |
பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில், 75 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 8 பார்மசி கல்லூரிகள் தான் இடம் பெற்றன.
ஆனால் பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 75 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 9 பார்மசி கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் தமிழக பார்மசி கல்லூரிகள் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும் முயற்சி செய்ய வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!