பாலங்கள் பயணத்தை எளிதாக்க
வந்த பாதுகாவலர்கள்
கோலங்கள் மாற கோபத்தில்
கதறும் அவலங்கள்
எந்த படம் வந்தாலும்
எந்த நடிகர் என்றாலும்
பாலங்களே விளம்பர பலகைகளாக
மேல் செல்லும் வாகனங்கள்
வீசும் குப்பைகளை சுமக்கும் கூடைகளாக
இரவு ராஜாக்களின் விளையாட்டு மைதானங்களாக
நீர் போகும் வழியெல்லாம் நெகிழியால்
அடைபட்டு மழை நீரை வெளியேற்ற
தெரியாத அபலைகளாக
காலடியில் நடைபாதை கடைகளுக்கு
இடமளிக்கும் கற்பகவிருட்சங்களாக
இருக்கும் நிலை மாறிடுமா?
பாலத்தின் அழுகுரலும் ஓய்ந்திடுமா?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!