என் வார்த்தைகளை
நீங்கள் எழுதுக்களின் கூட்டாகவோ
சொற்களாகவோ பார்க்கிற வரையில்
என் உணர்வுகளை
ஒருபொழுதும் உங்களால்
மொழிப் பெயர்த்து
சிலாகிக்க முடியாது!
முடிந்தால் மெல்லிய
மவுனத்தில்,
என் குரலின்
ஆழத்தில் மூழ்கி
நீந்திப்போய் பாருங்கள்!
நான் ஒளிப்படாத
வெளிப்படாத ஆதி அழுத்தமென்று
நீங்கள் உணரும் தருணத்தில்
நான் பாலைவனமாய்
மாறியிருக்கக் கூடும்…
கவிஞர் விசித்திரக்கவி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!