அந்த மழை நாளின் பின்னொரு நாளில்
இலகுவாய் குடை விரித்து நின்றன
காளான்கள் ஈர நசநசப்பிலும்…
பொந்துகள் அடைபட்டதை சீர் செய்தபடி
புடமேற்றிக் கொண்டிருந்தன செல்கள்…
தும்பிகள் பறந்து அடங்கியிருந்த வெளியில்
ஈசல்களும் இல்லாது இருந்தன…
சரியான வேட்டையால் சரிந்த தொந்தியுடன்
மல்லாந்து படுத்து மௌனித்திருந்தன தவளைகள்…
ஓடிக்கொண்டிருந்த காகிதக் கப்பல்கள்
சிதைந்து கிடந்தன
ஓங்கிய மரம் முறிந்து நசுங்கிப் போன
அந்த குடிசையைப் போல்…

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250