நிகழ்ந்தவை யாவும்
கரை ஒதுங்கின
சேர்ந்திருத்தலின்
சங்கிலிப் பிணைகளறுந்து!
இருவருக்கும் இடையில் குடியிருந்த
அசாத்திய நெருக்கம் தொலைந்து
அளவின்றி இடைவெளி
அமைந்தது!
காலம் பறக்கும்
காரணங்கள் கசக்கலாம்
இன்றியும் போகலாம்
வித்தியாசங்களின் விகிதாசாரம்
சேர்ந்து போகலாம்!
அன்றைய மோகங்கள்
போகங்கள்
அன்பான தருணங்கள்
கிழிந்த குப்பையாய்
பறக்கும் சருகுகள் மிதிபட
பயணித்த பாதைகள்
இனி வெவ்வேறாகும்
வீடு உடைய
குழந்தைகள் கலைய!
எதையோ தேடிய பாதைகள்
நிம்மதி தேடிக் கொண்டதாய்
மகிழ்ந்து
மலர்ந்து விட்ட
விவாகரத்துக்குப் பின்
இனி என்னவெனப்
புரியவில்லை!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!