பிரெஞ்ச் பிரை செய்வது எப்படி?

பிரெஞ்ச் பிரை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உருளைக் கிழங்கு உணவு வகை ஆகும். உணவு விடுதிகளில் இதன் விலை அதிகம்.

பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதனை செய்து கொடுத்து அசத்தலாம்.

வீட்டில் எளிதான முறையில் உருளைக்கிழங்கு பிரெஞ்ச் பிரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு – ½ கிலோ கிராம்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சம் பழம் – 1 (மீடியம் சைஸ்)

எண்ணெய் – தேவையான அளவு (பொரித்தெடுப்பதற்கு)

 

செய்முறை

முதலில் உருளைக் கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளவும். எலுமிச்சையை சாறு பிழிந்து கொள்ளவும்.

 

பிரெஞ்ச் பிரை செய்ய தேவையான பொருட்கள்
பிரெஞ்ச் பிரை செய்ய தேவையான பொருட்கள்

 

உருளைக் கிழங்கை படத்தில் காட்டியவாறு விரல்களாக நறுக்கிக் கொள்ளவும்.

 

நறுக்கிய‌ உருளைக் கிழங்கு துண்டுகள்
நறுக்கிய‌ உருளைக் கிழங்கு துண்டுகள்

 

நறுக்கிய உருளைக் கிழங்குத் துண்டுகளை நீரில் போடவும். உருளைக் கிழங்குத் துண்டுகள் நீரில் மூழ்குமளவுக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

 

உருளைக் கிழங்கு துண்டுகளை நனைய வைக்கும்போது
உருளைக் கிழங்கு துண்டுகளை நனைய வைக்கும்போது

 

அதனுடன் தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். இக்கலவையை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து கலவையை சல்லடையில் இட்டு உருளைக்கிழங்குத் துண்டுகளை வடிகட்டிக் கொள்ளவும்.

 

தண்ணீரை வடிகட்டும் போது
தண்ணீரை வடிகட்டும் போது

 

இரண்டு நிமிடம் கழித்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் வடித்து வைத்துள்ள உருளைக் கிழங்குத் துண்டுகளைப் போடவும்.

 

உருளைக் கிழங்கு துண்டுகளை அடுப்பிலிடும் போது
உருளைக் கிழங்கு துண்டுகளை அடுப்பிலிடும் போது

 

வேகும் உருளைக் கிழங்கு துண்டுகள்
வேகும் உருளைக் கிழங்கு துண்டுகள்

 

பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான உருளைக்கிழங்கு பிரெஞ்ச் பிரை தயார்.

 

சுவையான பிரெஞ்ச் பிரை
சுவையான பிரெஞ்ச் பிரை

 

இதனை தக்காளி சாஸ் உடன் சேர்த்து உண்ணலாம். சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பொரித்தெடுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளுடன் மிளகுத் தூளையோ அல்லது மிளகாய்த் தூளையோ கலந்து உண்ணலாம்.

உப்பு தேவையெனில் பொரித்தெடுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளுடன் கலந்து கொள்ளவும்.

ஜான்சிராணி வேலாயுதம்