பழ. தமிழன் சின்னா அவர்களின் இந்தக் கவிதையைப் படித்ததும் சில்லென்று ஒரு புத்துணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும்.
சோர்ந்து போகாதீர்கள்
பறவைகளைப் பாருங்கள்!
பயம் கொள்ளாதீர்கள்
உறவுகளை நினையுங்கள்!
கோபத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள்
குளத்தில் நீராடுங்கள்!
மகிழ்ச்சியை மறைக்காதீர்கள்
குழந்தைகளைப் பாருங்கள்!
தற்பெருமை பேசாதீர்கள்
தனிமையில் வாழ்ந்து பாருங்கள்!
தர்க்கம் செய்யாதீர்கள்
தன்னடக்கம் கொள்ளுங்கள்!
எதையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள்
யாசகம் பெறுவோரை நினையுங்கள்!
கடும் சொற்களை விதைக்காதீர்கள்
மழலை சொல் கேளுங்கள்!
விரக்தியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்
விடியலை எதிர் நோக்குங்கள்!
அதி தீவிர அவசரம் காட்டதீர்கள்
பொறுமையினைப் போற்றுங்கள்!
பிறருக்காக வாழ்ந்து காட்டாதீர்கள்
நீங்கள் பிறந்ததிற்காக வாழுங்கள்!
மதத்தினை உயர்த்திப் பிடிக்காதீர்கள்
மனிதத்தை உயர்த்துங்கள்!
பழ. தமிழன் சின்னா
புதுக்கோட்டை
6383698728