பிறந்தது புத்தாண்டு – நாம்
பெற்றதை எண்ணி மகிழ்ந்திட செய்திடும்
பேரொளி ஒன்று புலர்ந்திடும் காலையில்
பிறந்தது புத்தாண்டு!
சிறகினை விரித்திட – வானச்
சிறையினை உடைத்திட
சிறந்தவை தம்மால் புவியை நிறைந்திட
பிறந்தது புத்தாண்டு!
வரலாறு என்பதோ – நாம்
வாழ்ந்ததை பேசிடும், இனி
வருங்காலம் என்பதை வரமென மாற்றிட
பிறந்தது புத்தாண்டு!
உறவென உயிரென – புவி
உயிர்களை கண்டிட
உலகெல்லாம் அன்பே நிலைபெற
பிறந்தது புத்தாண்டு!
திறனுடைய மாந்தரின் – நின்
தோள்வலி பெருகிட
அறநெறி நிலையாய் புவியினை ஆண்டிட
பிறந்தது புத்தாண்டு!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!