கணபதி

பிள்ளையாரைப் பிடித்திடுவோம்

கணபதியை கைக்கூப்பி பக்தி செய்வார்
கண்டிடுவார் இன்பமயம் கன்னல் ஆக

உணர்ந்திடுவார் உண்மையாக உள்ளம் காண
உத்தமனாய் பூவுலகில் உய்ந்து வாழ்வார்

குணம்கொண்டு நிறைவோடு கும்பிட் டோர்கள்
துன்பநிலை ஓடிடுமே தேனாய் மாறும்

மணத்தோடு மங்கலங்கள் தங்க வேண்டி
பிள்ளையாரைப் பிடித்திடுவோம் பாங்காய் வாரீர்

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com