பீட்டா என்ன பெரியாளா?
அவனுக்கு இத்தனை அடியாளா?
நாட்டைக் கெடுக்க வந்தவனை
நாமும் தடுக்க வேண்டாமா?
மயிலில் ஏறிடும் முருகனையும்
ஜெயிலில் போட்டு விடுவாரா?
துயிலுக்கு பாம்பினைக் கொண்டவனை
தூக்கில் தொங்க விடுவாரா?
எலியினை கொடுமை செய்வதற்கு
என்ன தண்டனை கணபதிக்கு?
பலியாய் ஆடு கேட்பதற்கு
பல்லாண்டு தண்டனையா கருப்புக்கு?
மானின் மேலே ஆசை வச்ச
மனைவிக்காக அதைக் கொன்ன
கானக ராமனை என்ன செய்ய
காத்திருக்கு இந்த பீட்டா?
இன்று ஜல்லிக்கட்டைத் தவறவிட்டால்
எப்படி எல்லாம் கேள்வி வரலாம்?
தோள்கொடு நீயும் தோழா
ஓடட்டும் நாட்டை விட்டு பீட்டா
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!