ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
பாப்பாக்களுக்கு மட்டுமல்ல
நம் போன்ற பீப்பாய்களுக்கும் தான்…
ஆம் ஓய்ந்திருக்கும்
மனது வன்மமிக்கது…
எவர் மீதாவது
வன்மத்தை கொட்டிவிடத் துடிக்கும்!
ஓய்ந்திருக்கும் மனது
மிருகத்தனமிக்கது
எவரையும் காயப்படுத்த தயங்காது!
ஓய்ந்திருக்கும் மனது
விஷமிக்கது
நம் உடலையே
நோயாளியாக்கும் தன்மை கொண்டது!
எனவே மனதை ஓயாதிருக்க செய்வது
நமக்கும் நம்மை சார்ந்தோருக்கும்
நலம் பயக்கும்!
நன்மை பெருக்கும்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942