புதிய மாற்றம் விரும்பினால்
புதிதான ஒன்றைத் தேடு
புதிதான ஒன்றாய் மாற்றமடைய
புதிய வழிகளைத் தேடு
வாழ்வைப் புத்தாக்கம் செய்ய
விடாது முயற்சி செய்
அஃது அழகிய மாற்றமடைந்து
இனிதான ஒன்றாக -உன்
கரங்களில் புத்துயிர் பெரும்
உனைப் புதுமைதனில்
புலமை பெறச் செய்யும்
புதிது என்பதே ஓர் மாற்றம்
மாற்றமே என்றும் மாறாதது
மாற்றம் இருந்தால் ஏற்றம் வரும்
புதிய பாதை பிறக்கும்
புதிய மாற்றம் தேடு விடாது முயற்சி செய்
புதிய வாழ்க்கை உனதே நாயகனே!

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188