சிதிலமடைந்த தேவாலயத்தின் முன்பாக ஊரே கூடியிருந்தது. அங்கே 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. உடனடியாக புதிய தேவாலயத்தை கட்ட துவக்குவது
2. புதிய தேவாயத்திற்கான தூண்கள் உத்திரங்கள் ஆகியவற்றுக்குத் தேவையானவற்றை பழைய புராதானமான தேவாலயதிலிருந்தே எடுத்துக்கொள்வது
3. புதிய தேவாலயம் கட்டும் வரை பழைய ஆலயத்தையே தொடர்ந்து பயன்படுத்துவது
மூன்றாவது தீர்மானம் முதல் இரண்டு தீர்மானங்களைச் செயல்படுத்த விடாமல் செய்து விட்டது.
நாமும் பல நேரங்களில் இது போன்றே, நாளை முதல் என எத்தனையோ மாற்றங்களை நடைமுறைப்படுத்த சிந்தித்து, செயல்படுத்தாமல் தொடர்வதை பழக்கமாகவே கொண்டு பயணிக்கின்றோம்
மாற்றங்கள் செயல்படுத்தாத வரை மாறாது தொடர்ந்தேதான் வரும்.
வெற்றி பெற்ற மனிதர்களெல்லாம் மாற்றங்களை மனமுவந்து ஏற்று கொண்டவர்களன்றி மற்றவர்களல்ல.
சின்ன சின்ன செயல்களில் செய்யப்படும் மாற்றங்கள் பெரிய விளைவுகளை தவறாது கொண்டு வந்து சேர்க்கும்.
கைபேசி: 9865802942