புதிர் கணக்கு – 11

காகம் ‍- காகா

ஒரு நாள் நமது மகாராசாவுக்கு பக்கத்து நாட்டிலிருந்து அன்பளிப்பாக மாம்பழங்கள் வந்திருந்தன. அவற்றை மன்னர் தாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பங்கு போட்டு தந்தார்.

மந்திரியான எனக்கு இருந்த பழத்தில் பாதியை கூடையிலும், அரைப் பழம் தின்னவும் தந்துவிட்டார்.

பின்னர் தளபதி புலியாருக்கு மீதி இருந்ததில் பாதியை கூடையில்  தந்தார்.

மூன்றாவதாக ஒற்றர் தலைவனான பஞ்சமன் பருந்துக்கு மீதி இருந்ததில் பாதியும் ஒரு அரைப் பழமும் தந்தார்.

இவ்வாறு கொடுத்த பழங்கள் போக மீதி பனிரெண்டு பழங்கள் இருந்தன. அவற்றை சேவகன் கழுதை காங்கேயனுக்கு தந்து விட்டார்.

ஆளுக்கு அரைப்பழம் கூடுதலாக பெற்றாலும் யாரும் பழத்தை அறுக்கவேயில்லை என்றால் மொத்தம் அன்பளிப்பாக வந்த‌ பழங்கள் எத்தனை? இதுதான் இன்றைய கேள்வி” என்று புதிரை கூறியது நரி.

 

பத்து நிமிடங்கள் முடியும் தறுவாயில் எழுந்த சின்னக்காளி ஒரு விடையை கூறியது.

“மிகவும் ஆச்சர்யம்தான் சின்னக்காளி விடை கூறுவது” என்று ஆச்சர்யப்பட்டபின் “சின்னக்காளி கூறிய விடை மிகவும் சரியானதுதான் அவனை அனைவரும் கைதட்டி பாராட்டுங்கள் என்றார் மந்திரி.

எலிக்கண்ணன் முதலாக அனைவருமே கைதட்டி சின்னக்காளிக்கு உற்சாகமூட்டி சின்னக்காளி வெட்கத்தால் தலைகுனிந்து நின்றது அதன் கண்களில் தண்ணீர் நிரம்பியது “சே இப்படிப்பட்ட நல்லவர்களுக்கு அல்லவா நாம் தொல்லை கொடுத்தோம்” என்று வருத்தப்பட்டு கொண்டது.

“பதினோராவது புதிரை காக்கை சின்னக்காளி சரியாக கூறியது” என்று மந்திரி அறிவித்தது.

காக்கை பறந்து வந்து மேடையில் நின்று பேச ஆரம்பித்தது.

“ஐயா, மன்னர் தமக்கு வந்த பழங்களை பருந்துக்கு பாதியும் ஒரு அரை கூடுதலாகவும் பின்னர் புலிக்கு பாதியும் பின்னர் நரிக்கு பாதியும் ஒரு ½ கூடுதலாகவும் தந்ததாக கூறப்பட்டது. மீதி பழங்கள் 12 என்றும் கூறப்பட்டது.

அதன்படி மீதி 12 எனில் பருந்துக்கு பாதி ஆக 25 என்றும், 12½ + ½ கூடுதல், புலிக்கு தந்தது 25 என்றும், ஆக 51 நரிக்கு தந்தது (50½ + 1/2 ) என்றும், ஆக 101 என்றும் வந்தது” என்று கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)