புதிர் கணக்கு – 12

புதிர் கணக்கு

“அடுத்த புதிருக்கு போகலாம்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார்.
“கவனமாக கேளுங்கள் இது மிகவும் சுலபமான ஒன்று அனேகமாக, சீனியப்பன் கூட பதில்சொல்லக்கூடும்” என்று கூறினார்.

“பத்துக்கு கீழே ஒரு எண்ணை தேர்வு செய்து கொண்டு அதனை பத்து முறை மட்டுமே பயன்படுத்தி அதாவது கூட்டல் மட்டுமே செய்ய வேண்டும் என்பது விதி இவ்வதியின் அடிப்படையில் விடையாக 280 வரச் செய்ய வேண்டும் நீங்கள் தேர்வு செய்யவும் எண் எது? என்பதே புதிர்” என்றார்.

அனைவரும் அமைதியாக இருந்தனர். அணில் அண்ணாச்சாமி தனது இனிய குரலின் மூலம் பதில் கூறியது, எலிக்கண்ணன் குட்டி எலியும் பதில் கூறியது.

மந்திரியார் இருவரிடமும் தனித்தனியே விளக்கம் பெற்றார். பின்னர் “இவர்கள் இருவரின் விடையும் சரியானதுதான். எனவே ஆளுக்கு பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும். அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்துங்கள்” என்று கூறி முடிக்க கைதட்டல் ஓசை அரண்மனையில் எதிரொலித்தது.

“இந்த புதிருக்கு எலியும் அணிலும் விடை கூறின” என்றார் மந்திரியார்.

“அப்படியானால் அணில் அண்ணாச்சாமி வந்து விடை கூறலாம்” என்றார் வெட்டுக்கிளியார் அதன்படி அணில் மேடையேறியது.

“இந்த 12ம் புதிரில் 10க்கு கீழுலுள்ள ஒரு எண்களை பயன்படுத்தி 10 முறை மட்டுமே பயன்படுத்தி கூட்டலில் மட்டுமே 280 வரச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி கீழே கண்டபடி
88+
88+
88+
88+
8+
8+
—–
280 என கண்டுபிடித்து விடைகூறினேன்” என்றது.
—–

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

Visited 1 times, 1 visit(s) today