புதிர் கணக்கு – 33

புல்புல் பறவை

“நண்பர்களே! சற்று சுலபமான புதிரையே கேட்கிறேன். அனேகமாக வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர்களே பதில் சொல்லக் கூடும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசியது.

எனது சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகின்றது.

அதாவது நானும் எனது தம்பியும் சிறு பறவைகளாக இருக்கும்போது எனது தாயார் எங்களுக்கு உணவாக சில மீன்களைப் பிடித்து வந்து தந்தார்.

நான் என் தம்பியிடம், “தம்பீ! நீ உனது பங்கிலுள்ள மீன் ஒன்றை எனக்குக் கொடுத்துவிடேன். அவ்வாறு நீ எனக்குத் தரும் போது உன்னைவிட இருமடங்கு மீன்களை நான் பெற இயலுமல்லவா?” என்று கேட்டேன்.

அதற்கு அவனும் மறுத்துவிட்டான். இது எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

இப்போது கேள்வி இது தான். நானும் எனது தம்பியும் ஆளுக்கு எத்தனை மீன்களை வைத்திருந்தோம்?.

தெரிந்தவர்கள் கூறலாம். வெளிநாட்டுக் காரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இவ்வளவு சுலபமான புதிர் கணக்கை யாருமே கூறப்போவது இல்லை” என்று கூறிவிட்டு அமர்ந்தது கரிகாலன் கழுகு.

சிறிது நேரம் அங்கு மொளனம் நிலவியது. அப்போது தான் எங்கிருந்தோ வேகமாக வந்த சிட்டுக்குருவி சின்னான் வெளிநாட்டுப் பறவைகளையும் உள்ளுர்ப் பறவைகளையும் மாறி மாறி பார்த்தது.

பிறகு குறுமணியின் அருகில் அமைதியாக வந்து அமர்ந்துவிட்டது.
“என்ன யாருமே பதில் சொல்லத் தயாரில்லையா?” என்று கரிகாலன் கழுகு மீண்டும் கேட்டது. சற்றுத் தயங்கி தயங்கி எழுந்த புல்புல் பறவை சந்தேகத்துடனே ஒரு பதிலைக் கூறியது.

“புல்புல் பறவை கூறிய விடை சரியானது தான்” என்று கரிகாலன் அறிவித்தது.

 
கரிகாலன் தனது புதிரில் தனது தம்பியுடன் மீன்களைப் பகிர்ந்து கொண்டதைப் புதிராக கேட்டது. அதன்படி தம்பி தனக்கு ஒன்று தந்தால் அவனை விடத் தன்னிடம் இருமடங்கு என்றும் கூறியது.

கழுகு கரிகாலன் பங்கில் இருந்தவை 5 என்றும் அவர் தம்பியிடம் இருந்தவை 4 என்றும் புல்புல் பறவை கூறியது.

தம்பி 1 மீனைக் கரிகாலனிடம் கொடுத்தால் அவரிடம் 6 இருக்கும்.

தம்பியிடம் 3 இருக்கும்.

என்றது வெளவால் வாணி.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)