அன்பு அறம் நட்பு நன்றி
இன்பம் துன்பமே வாழ்க்கை
ஆணவம் துரோகம் பொறாமை கோபம்
இவைநீங்கி வாழ்வதே வாழ்க்கை
இரக்கம் நாணம் நற்குணம் நம்பிக்கை
விருப்பமும் அமைவதே வாழ்க்கை
ஈதல் காதல் தேடல் பாடல்
புரிதல் கொள்வதே வாழ்க்கை
உதவி உண்மை உறவினர் சுற்றம்
கலந்து விளைவதே வாழ்க்கை
ஊக்கம் கனவு வெற்றி தோல்வி
பற்றி வருவதே வாழ்க்கை
எளிமை தனிமை பணிவு கனிவு
துணிவு பெறுவதே வாழ்க்கை
ஏற்றம் இறக்கம் மாற்றம் ஏமாற்றம்
முன்னேற்றம் தருவதே வாழ்க்கை
ஐயம் வேடம் கபடம் களவும்
பொய்யும் விடுவதே வாழ்க்கை
வாழ வாழவைக்க வாழ்த்திட உயர்த்திட
பயனோடு முடிவதே வாழ்க்கை