புதுசா பூக்கலாம் வாங்க!

ஆனந்த மழையில் ஆசையாய்

நனைந்தோமே!

ஆயிரம் மழைத்துளிகள் மத்தாள சத்தத்துடன்

மகிழ்ச்சி தந்தனவே!

 

ஏரியிலே மீன்கள் எல்லாம்

எங்கெங்கோ துள்ளி குதிக்க

சின்ன மீன்கள்

தூண்டில் சிக்கி தவிக்குமே!

தாவிப் பிடித்து

தரையில் நீச்சல் அடித்து

சகதியினை சாமியாக்கி

பூசித்தான் பூமித்தாயை முத்தமிட்டாயே!

 

குழந்தாய்

புதிதாகப் பூத்து விடு

புது இன்பம் தந்து விடு!

விஞ்ஞானக் குழந்தையே

விண்மீன்களை ரசிக்காமல்

விட்டில் பூச்சிகளாக வாழாதே

புதுசா பூக்கலாம் வாங்க!

 

கண்ணாடிக் குழந்தைகளே

கண்களை மூடிக் கொண்டு

கனவுகளை ரசிக்காதீர்கள்!

கண்ணாடியினை வீசி எறிந்து விடு

கண்களை திறந்து விடு

கண்கொள்ளாக் காட்சியாகும் கவிதைகள்

படைத்திடு

புதுசா பூக்கலாம் வாங்க!

 

செல்போனில் ஆடும் ஆட்டம்

செல்லாத கள்ளாட்டமாம்

பதுங்கி கொள்ள வேண்டாம்

பல்லாங்குழி ஆட்டம் ஆடலாம்!

பயப்பட வேண்டாம்

பாண்டியும் சேர்ந்து ஆடலாம்!

பத்தவில்லையா

பச்சைக் குதிரையும் சேர்ந்து தாவலாம்!

புதுசா பூக்கலாம் வாங்க!

 

வீடியோ கேம் வேண்டாம் குழந்தாய்

வினோத விளையாட்டு எதற்கு கண்ணே?

விசித்திரமான வெற்றி வேண்டாம்

கோழைத்தனமான வெற்றி வேண்டாம்

தோற்றுப் போக இன்னொரு குழந்தை எங்கே?

வெளியில் வந்து விளையாடு குழந்தாய்!

வெற்றிக்கு முன் பல தோல்விகளின்

சுவை அறிந்திடு குழந்தாய்

புதுசா பூக்கலாம் வாங்க

புதுமைகள் படைக்கலாம் வாங்க!

 

லஞ்சம் இல்லா லட்சியவாதிகளும்

அலட்சியம் இல்லா அரசியல் கட்சிகளும்

இனி உங்கள் கரம் கோர்த்து பிறக்கட்டும்

வாழ்வு சிறக்கட்டும்!

புத்தாண்டில் புதிதாய் மலரட்டும்

மக்கள் மனதில் மணம் வீசட்டும்

புதுவருடம் புதிதாய் பிறக்கட்டும்

நாமும் புதுசாய் பிறக்கலாம் வாங்க!

நாள்தோறும் மணம் வீசலாம் வாங்க!

பழ.தமிழன் சின்னா
புதுக்கோட்டை
9047858856

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.