புதுத்தெரு பிள்ளையார்

பிள்ளையாரே பிள்ளையாரே புதுத்தெருப் பிள்ளையாரே

பிள்ளை நாங்கள் உன்னை வாழ்த்திப் பாடிடுவோம்

மண்டல விநாயகனே எங்கள் மனதில் நிற்போனே

மக்கள் நலம் காக்க உன்னைத் தொழுதிடுவோம்

 

வேப்ப மர நிழலில் வீற்றிருப்பானே

சாலையோரம் புகழோடு அமர்ந்தோனே

காலை மாலை தினமும் வணங்கிடுவோம்

 

ஏழை பணக்காரப் பேதமில்லோனே

வாழவைப்பாய் எல்லோரையும் நல்லாவே

வைகாசி தையினிலே பொங்கல் வைப்போம் உனக்கு

வரமருள்வாய் நல்வாழ்வு எங்களுக்கு

 

மார்கழி மாதமுழுதும் உன் புகழ் பாடிடுவோம்

ஊர்முழுதும் சீர்பெறவே நின்னருள் வேண்டும்

புதுத்தெரு அப்பனே அதுவுன் தெருவே

பார்த்துக் கொள்வாய் நீயும் நல்லாவே

– வ.முனீஸ்வரன்