அமைதியும் பொறுமையும்
பொன்னான குணம்
கல்வியும் ஒழுக்கமும்
ஒன்றுவதே அறிவு
கோபத்தையும் பாவத்தையும் தீண்டாதே
பிறர் செய்யவும் தூண்டாதே
பசிக்கு உணவிடு
பகையானாலும் உதவிடு
அவசரம் தவிர்த்திடு
அன்பால் உயர்ந்திடு
சொல்வதை செய்துவிடு
வெல்வதை தொடர்ந்துவிடு
மனதை அடக்கு
வலிமை உனக்கு
கடமையை மறக்காதே
மடமையை நினைக்காதே
நூலகம் சென்றிடு
உலகை வென்றிடு
பயந்து வாழாதே
பணிந்து வாழ்ந்திடு
Nice one