புதுப் பொன்மொழிகள் – 4

மதிக்காத இடத்திற்கு

மறந்தும் செல்லாதே!

மதிப்பவரை மறந்தும்

மறக்க எண்ணாதே!

பொன்னே தந்தாலும்

பொய் சொல்லாதே!

சொர்க்கமே வந்தாலும்

சொந்தத்தை இழக்காதே!

உதவும் பண்பை

உயிருள்ளவரை மறக்காதே!

உலகமே கிடைத்தாலும்

உண்மையை மறைக்காதே!

தளர்வு வந்தாலும்

தன்மானம் இழக்காதே!

துணையே இல்லையானாலும்

துணியை இழக்காதே!

தடுமாற்றம் வந்தாலும்

தன்னம்பிக்கை இழக்காதே!

சிரித்து பேசும்போதும்

சிந்திக்கத் தவறாதே!

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.