விடிய ல் காலை
பொழுது புலர்ந்த வேளையிலே
புதுவாழ்வும் இங்கு பிறந்திடும்
துயரங்கள் பறந்தோடிவிடும்
நல்ல செய்திகள் வாசலைத் தட்டும்
நல்லவர்கள் நம்மைத் தேடிவருவர்
வருவோருக்கு வந்தனம் செய்வோம்
விருந்தோம்பல் நாமும் நல்கிடுவோம்
மனிதநேயம் போற்றி வளர்ப்போம்
மானுடம் நேசித்து உதவிகள் செய்வோம்!
இரா.சீ.பாலகுமார் M.A.
கைபேசி: 9283182955
மின்னஞ்சல்: rsbalakumar1953@gmail.com