தொட்டுப் பார்த்து மகிழ
புத்தகம் வெறும் அழகுப் பொருளல்ல
அது அறிவுப் பெட்டகம்!
வாசிக்கும் இசைக் கருவியும் அல்ல
நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று
உலகமே தனக்குள் இருந்தாலும்
தன்னடக்கத்தை கையில் வைத்துள்ளதே!
அம்மாவின் அறிவுரை
அப்பாவின் நெறிமுறை
ஆசானின் படிப்பினை
நண்பனின் வழிமுறை
தாத்தா பாட்டியின்
வாழ்வியல் வழிமுறை
இவர்களின் சொற்கள்
காலத்தில் மாறினாலும்
மாறாத பொக்கிசம்
புத்தகம் மட்டுமே
என்பதில் பெருமிதமே!
உலகைச் சுற்றிப்பார்க்க
செலவில்லா பயணமமைய
நூலகம் சென்றால்
புத்தகத்தில் அறிவோம்
அறிவுச் செல்வத்தை!
மேலிருந்து கீழ் நோக்கி வாசித்தால்
வாழ்வது கீழிருந்து மேல்நோக்கி
உயரும் என்பதில் ஐயமுமுண்டோ?
வாசிப்பு வாசிப்பு
அதுவே எனது சுவாசிப்பு
இதில் தடை ஏதும் வாராமல்
காப்பாய் இறைவாவென
இறைஞ்சுகிறேன் எந்நாளும்!
ஞா. கலைச்செல்வி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!